ஐம்பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள்.
இதேபோல மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் திருமூலர் தன்பாடலில்,
“அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது” என குறிப்பிட்டுள்ளார்.
“பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரமாறில் தோன்றும் பிறப்பு” என்கிறார் ஒளவையார்.
பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது என்று ஒளவையார் பாடியுள்ளார்.
நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும், நெடியற்றும், ஓர் ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள்ஏரிகள்கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. தட்பவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமாக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்குஆவி ஒடுக்கம்வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டே கடலைச் சென்றடைகிறது.
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.[1] வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மைவாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புகளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். கடல்சார் எல்லை, அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, சதுப்பு நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.
காற்று (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது சூரியக் காற்று (solar wind) எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.
ஆகாயம் (akayam) – Meaning in English
வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். இது பொதுவாக வளிமண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும்.
நெருப்பு அல்லது தீ அல்லது அக்கினி (Fire) என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்..நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான்.

நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை “அக்னி” என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.
நெருப்பின் சுடரில் மேற்பரப்பில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள்விலங்குகள்மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பானது, சூழல் மண்டலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.

Leave a Comment